இந்த தகவலை இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் பொருளதார உடன்படிக்கையை கைச்சாத்திட்டால் இந்திய மருத்துவர்கள் பெருமளவில் இலங்கையில் தொழில்புரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
எனவே இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதியை மாற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட மருத்துவர்களுக்கான சான்றிதழ்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று மருத்துவ சங்கத்தின் தலைவர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுங்கு இலங்கையில் கடைப்பிடிக்கப்படாத காரணத்தினால் இலங்கையின் தனியார் மருத்துவமனையில் விரும்பிய வகையில் வெளிநாட்டு மருத்துவர்களை சேவையில் அமர்த்தி வருகின்றன.
எனவே குறித்த திருத்தங்களை உடனடியாக ஏற்படுத்தவேண்டும் என்று ஹேரத் கோரியுள்ளார்.