பொகவந்தலாவ பெருந்தோட்டம் ஒன்றில் 12வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தவரை ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஆர்.ராஜேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.