வவுனியா வரியிறுப்பாளர் சங்கம் ,தமிழ் விருட்சம் ,கலை ,இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஹோட்டல் வன்னி இன் அனுசரனையில் ஏற்பாடு செய்த கவிசக்கரவர்த்தி கம்பன் நினைவு தினம் 26.03.2016 சனிக்கிழமை சூசைபிள்ளையார்குளம் சந்தியில் அமைந்துள்ள கம்பன் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ,இறைபணி செம்மல் வை.செ.தேவராசா , புளியடி பிள்ளையார் கோவில் தலைவர் நாதன் ,முன்னாள் நகரசபை உபநகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ),தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,ஹோட்டல் வன்னி இன் உரிமையாளர் ப,சாய்தேவ்,முன்னாள் பிரதேசபை உறுப்பினர் சிவம் ,தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் சு.காண்டீபன் ,செயலாளர்ஸ்ரீ .கேசவன் ,பொருளாளர் த,நிகேதன், வர்த்தகர் விக்னா ,சமுக ஆர்வலர்கள் பிரதாபன் ,தியாகராசா ,திருமதி அகிலா ,வில்வராசா உட்பட பலர் கலந்து கொண்டனர் ,
நிகழ்வில் முதலில் மலர் மாலை ,மலர் தூவி கம்பருக்கு வணக்கம் செய்த பின் உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் கம்பராமாயணத்தை எமக்கு தந்து வாழ்க்கை நெறி முறையை கற்று தந்தது கம்பர், அவரின் பெருமைகள் பல என்றார் . தமிழுக்கு ”கதி” இருவர் அதில் ”க” என்ற எழுத்து கம்பர் ”தி” என்ற எழுத்து திருவள்ளுவர் என்றார் ,அப்படியான பெருமைகளை கொண்டவர் கம்பர் என்றார் . கம்பர் வீட்டு தறியும் கவி பாடும் என்ற முது மொழியையும் நினைவு படுத்தி உரையாற்றினார் .அத்துடன் சிலையை 1997இல் வைத்த உபநகர பிதா சந்திரகுலசிங்கம் அவர்கள் தொடர்ந்து இந்த நினைவு தினங்களில் கலந்து வருவதை பாராட்டுவதாகவும் ,ஏனையோரும் ,அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்
அடுத்து நன்றி உரை நிகழ்த்திய சந்திரகுமார் (கண்ணன் )அவர்கள் நினைவு தினம் செய்ய வேண்டும் என்றவுடன் உடனே வர்ண பூச்சு செய்து தந்த ஹோட்டல் வன்னி இன் உரிமையாளர் ப.சாய் தேவ் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்றார் ,அத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் என்றார் .
இறுதியில் அனைவருக்கும் தேநீர் புளியடி பிள்ளையார் கோவில் தலைவர் நாதன் அவர்காளால் பரிமாற பட்டு நிகழ்வு நிறைவடைந்தது .




