ஹக்கடுவை கடற்பகுதியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.இன்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானவர் அளுத்வல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கிய நபரை இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர். எனினும் , அரை மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல எவரும் முன்வரவில்லை .
அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான நபரின் மகன் அவ்விடத்திற்கு வந்து அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கியுள்ளார். பின்னர் , அவரின் மகன் குறித்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.