சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டம் ஒன்று இந்த வாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அதிகாரம் தொடர்பில் உட்கட்சி முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும், கட்சித் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார்
இந்த பிரச்சினை குறித்து இறுதி தீர்வை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு வினவியபோது, அரசியல் உச்ச பீடத்தை கூட்டி இது குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று கூறினார்.