தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பயணிகள் பேரூந்துகளுக்கு கல் எறிந்தது தொடர்பில் மூன்று சிறுவர்களிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை தெற்கு அதிவேக வீதியின் மில்லனிய பகுதியில் பயணித்த மூன்று பயணிகள் பேரூந்துகளுக்கு இனந்தெரியாத சிலர் கல் எறிந்து இருந்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துகள் இரண்டின்மீதும், தனியார் பேருந்து ஒன்றின் மீதும் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. விசாரணையின் போது , தாம் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு கல் எறிந்ததாக குறித்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.