பேருந்துசாலை சந்தி – ஜீவப்பரியாரியார் வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்றும் கடையொன்றும் முற்றாக எரியுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவிய வேளை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.