அமெரிக்காவின் 7 வது கப்பற்படையணியான யு.எஸ்.எஸ்.புளு ரிட்ஜ் தற்போது இலங்கை வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் இதுவாகும்.
அமெரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த போர் கப்பல் இலங்கை வந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.