ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கால்பந்து மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு பாக்தாத்தில் இஸ்கந்தரியா நகரில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டி முடிந்து பரிசளிப்பு விழா நடைபெற்ற போது கூட்டத்திற்குள் புகுந்த தற்கொலைக் குண்டுதாரி அதனை வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் அங்கிருந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 50 ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.எனினும், ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளே தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் வெடிபொருட்களுடன் மர்ம நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.