குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட அனுபவம் வாய்தவர்களின் விலகலின் பின்னர் இலங்கை அணி மீண்டும் பிரபலமான அணியாக வருவதற்கு சில வருடங்கள் தேவைப்படும் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என திசர பெரேரா புதுடில்லியில் வைத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று புது டில்லியில் இடம் பெறவுள்ளது. இலங்கை அணி அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டுமாயின் இப்போட்டியிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.