வெலிசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு குறித்த நபரை கைதுசெய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.