தெற்கு அதிவேக வீதியில் குறுந்துகஹஹேதேப்ம மற்றும் வெலிபென்ன பிரதேசங்களுக்கு இடையில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தினால் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று மாலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய வகை பாரவூர்த்தி ஒன்று சாரதிக்கு நித்திரை சென்ற காரணத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் காலியில் இருந்து பயணித்த இரண்டு சிற்றூந்துக்கள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் குறித்த விபத்தினை அவதானித்து அவர்களது வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதன் போது வெளிநாட்டவர்களை ஏற்றி வந்துள்ள வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த குறித்த சிற்றூந்துக்கள் மற்றும் பாரவூர்தியுடன் மோதுண்டுள்ளது.
குறித்த விபத்தினால் காயமடைந்தவர்கள் நாகொடை மற்றும் எல்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிறிய பாரவூர்தி மற்றும் பின்புறமாக வந்து மோதிய வேனையும் காவற்துறையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.