தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருன் விஜய், தமிழ் நாட்டுக்க விஜயம் செய்துள்ளார்.
அவரிடம் தமிழகத்தின் வெவ்வேறு அகதி முகாம்களின் பிரதிநிதிகள் அவரிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை கையளித்துள்ளனர். இதில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அகதிகளாக வசிக்கின்றவர்களால் குறைந்த பட்சம் சொந்தமாக ஒரு தொலைபேசி இணைப்பைக் கூட பெறமுடியாத நிலைமை நிலவுகிறது. கடந்த 30 வருடங்களாக இதேபோன்ற நிலைமையை தாங்கள் அனுபவிப்பதாக இலங்கைத் தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.