இன்று காலை ஹிக்கடுவை – களுப்பே – அதரவத்த பிரதேசத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரை கத்தியினால் குத்தி, இரும்பு தடி மற்றும் மண் வாரியினால் தாக்கிய நபர் ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. தாக்கியர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உறவினர்களானதுடன் நிலம் தொடர்பான கருத்து முறண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் சேவை புரிந்தவர் என காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்ததது. தாக்குதலுக்குள்ளானவர்கள், 45 மற்றும் 25 வயதுக்குற்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் 28 வயதான பெண் ஒருவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.