தெற்கு அதிவேக வீதியில் 66 வது மைல்லுக்கு அருகாமையில் பாரவூர்த்தி ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியை விட்டு விலகியமையினால் பாரவூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிவேக வீதி காவற்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தினால் காயமடைந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் அறியப்படாததுடன் எவ்விதமான வாகன நெரிசல்களும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்தது.