பல நிறுவனங்கள் பிரதமரின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. தற்சமயம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.
பிரதமர் அலுவலக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதவிர சில அமைச்சுக்கள் மற்றும் சில அரச திணைக்களங்களும் பிரதமரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கமைய கல்வி, மின்சக்தி, வீடமைப்பு ஆகிய அமைச்சுக்கள் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.