தற்போதைய அரசாங்கம், முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் சிலருடன் இரகசிய தொடர்புகளை கொண்டிருப்பதாக, ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன போன்றோருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. ஆனாலும் அவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இதற்கு அவர்களுடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள இரகசிய உடன்படிக்கைகளே காரணம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.