கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான தொடருந்து பாதையில், மஹவ தொடக்கம் தாண்டிக்குளம் வரையிலான தொடருந்து பாதை, சுமார் 110 ஆண்டுகளுக்கு பின்னர் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த பாதையை பார்வையிட்டதன் பின்னர், இதனைத் தெரிவித்துள்ளார்.
120 கிலோமீற்றர் நீளமான இந்த பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதுள்ளது. இந்த பாதையோடு வருகின்ற தொடருந்து நிலையங்களும் புனரமைக்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கவுள்ளதாகவும், இந்த நிதி இந்தியாவிடம் இருந்து இலகு கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.