யெமன் நாட்டில் வைத்து இந்திய கத்தோலிக்க பாதிரியார் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ளார்கள். 56 வயதான டாம் ஊசானலி என்னும் இந்த இந்தியரை பெரியவெள்ளி(25) அன்று கழுத்தறுத்து கொலைசெய்ய அவர்கள் திட்டம் தீட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு, ஜெமன் நாட்டு அரசு மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் அவரை மீட்க்க நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இருப்பினும் இதுவரை எந்த தகவலும் இவர் தொடர்பாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரிய வெள்ளி (ஈஸ்டர்) அன்று இந்த கத்தோலிக்க பாதிரியாரை கொன்று தமது பழியை அவர்கள் தீர்க்க உள்ளார்கள் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.