தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 யுவதிகளை காப்பாற்ற முடிந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. காவற்துறையினருடன் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 யுவதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மருதானை பிரதேசத்தில் தற்காலிக உறைவிடம் ஒன்றில் குறித்த யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த மோசடியுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயல்பாட்டு இயக்குனர் மற்றும் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி உபுல் தேசபிரிய, பி.பி.சி செவ்வியின் போது, குறைந்த வயதான யுவதிகளை பலவந்தமாக தடுத்து வைத்து, போலி ஆவணங்களை தயாரித்து சவுதி அரேபியாவிற்கு சேவைக்கு அனுப்பும் மோசடி இலங்கையில் பரவலாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.