மேஷம் -: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்-: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்-: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம் –: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
சிம்மம் – : குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
கன்னி – : காலை மணி 11.00 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண்டென்ஷன் வந்து போகும். நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம் –: காலை மணி 11.00 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
விருச்சிகம் -: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி
வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
தனுசு – : தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம் -: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.
கும்பம் -: காலை மணி 11.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், தடுமாற்றம் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
மீனம் -: காலை மணி 11.00 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.