தோற்றம் : 5 ஓகஸ்ட் 1952 — மறைவு : 14 மே 2018

புங்குடுதீவு
சுவிஸ் Baden

கண்ணீர் அஞ்சலி

உயிராய் அன்பாய்
உறவினில் வந்த மாமா
கனவிலும் நினைக்கவில்லை
காலன் கைகள் ஓங்குமென்று
கண்களில் நினைவுகள்
கண்ணீரும் ஆறாய் பாயுதே
அமைதியின் உருவமான
மாமாவினைக் காண்பது
-எவ்விடம்
அரவணைப்பதில் மாமா
உம்மைப்போல்
அவணியில் இங்கு யாருளர்
வாருங்கள் என்றழைத்திடும்
உங்கள் குரல்தனை
வாசலும் தேடி நிற்குதே
இன்றிருப்போர் நாளை
இருப்பதில்லையெனச்
சொல்பவராயிரம்
இருப்பினும் மனமது
தேறுமோ இதை மாற்றிட
இறைவனை நோகுறோம்
மதி மாறியே கலங்கி நாம் புலம்பிட
விதிஇதுதானென காலன்
என உயிர் பறித்திட
கதி கலங்கிடும் எம்மை
ஆற்றிடக் கடவுளேயெமக்குப் பதிலிடு
அத்தையும் பிள்ளைகளின் துயருக்கு
யாரினி ஆறுதல் கூறுவர்

எங்கள் பாசத்துக்குரிய மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்..

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பிரிவால் வாடும்…
த .விதுர்ஷா
த.தகீசன்
த.தேனுஷா
(மருமக்கள்)

2016-2018 all rights reserved TNN.LK